அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு – இந்திய வீரர் அறிவிப்பு!

Last Updated: புதன், 9 டிசம்பர் 2020 (15:21 IST)

இந்திய கிரிகெட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த பார்த்தீவ் படேல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

17 வயது சிறுவனாக இந்திய கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர் பர்த்தீவ் படேல். தோனிக்கு முன்னதாகவே அறிமுகமானாலும் அதன் பின்னர் தோனியின் வருகையால் அதன் பின்னர் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கி அவ்வப்போது கவனத்தை ஈர்க்கும் விதமாக விளையாடி வந்தார். இதையடுத்து கடைசியாக அவர் 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இதுவரை 25 டெஸ் போட்டிகளில் விளையாடி 934 ரன்களும், 38 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 736 ரன்களும் சேர்த்துள்ளார். அதே போல 2 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருக்கு வயது 35. இப்போது அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.





இதில் மேலும் படிக்கவும் :