செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (16:51 IST)

மலை ஏறுவேன்… யோகாசனம்… அது என்னால் முடியாது - பிரபல ஹாலிவுட் நடிகர்

சர்வதேச அளவில் ஹாலிவுட் படங்களுக்கு உள்ள வரவேற்பு அனைவரும் அறிந்ததே. அதில் நடிப்பவர்களுக்கான சம்பளமும் யாரும் நினைத்தே பார்த்திராத அளவில் இருக்கும்.

இந்நிலையில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருபவர் நடிகர் ஜேஸன் மாமோவா.இவர் தனக்கென்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இவர் தற்போது  அக்குவா மேன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.னுப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவர் யோகாசனம் குறித்து ஒரு தகவக் வெளியிட்டுள்ளார்.

அதில், மலையிலும் கார் இழுப்பதைக் கூட நான் செய்துவிடுவேன் ஆனால் யோகாசனம் என்னால் செய்ய முடியாது. இரண்டு மணிநேரம் யோகாசனம் என்பது மிகவும் கடினம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கோனான் தி பார்பேரியன் என்ற படத்திற்கு கட்டுமஸ்தான தோற்றத்தில் இருப்பதற்காகத் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்கும்போது, யோகா பயிற்சிக்குச் சென்றேன், அங்கு இரண்டு பெண்கள் கைகளை உயர்த்தி யோகாசனம் செய்தனர். என் கைகள் எல்லாம் இறுகிவிட்டதால் என்னால் அவர்களைப் போல் செய்ய முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.