புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 13 ஜனவரி 2021 (19:23 IST)

படப்பிடிப்புக்கு சைக்கிளில் சென்ற முன்னணி நடிகை !

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் போன்ற படங்களில் நடித்த நடிகை ராகுல் பிரீத் சிங். இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகாக பிஸியாக வலம் வருகிறார். இந்நிலையில்,  இவர் குறித்த ஒரு சுவாரஸ்யமான செய்திகள் வைரலாகி வருகிறது.

பொதுவாக நடிகர்களில் ஆர்யா,தனுஷ் போன்ற நடிகர்கள் சைக்கிள் பிரியர்கள் என்பது தெரியும். அவர்கள் அதிகாலையில் நீண்டதூரம் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதேபோல் நடிகைகளில் நடிகை ராகுல் பிரீத்சிங் சைக்கில் ஈடுபட்டுள்ளதாகச்  தகவல் வெளியாகிறது.

தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இவரது உடற்பயிற்சி வீடியோக்கள் ரசிகர்களிடம் பிரபலம். இந்நிலையில் தற்போது அவர் இந்தி நடிகர் அஜய்தேவ் உடன் நடித்து வரும் மேட் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் படப்பிடிப்புத் தளத்திற்கும் வீட்டிற்குமான 12 கிமீ தூரத்தை சைக்கிளில் சென்று வருகிறார். இதுகுறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது