திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (14:57 IST)

’மாநாடு’ திரைப்படம்: சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன்!

’மாநாடு’ திரைப்படத்தை தாமதமாக பார்த்ததற்கு மன்னிக்க வேண்டும் என சிம்புவிடம் செல்வராகவன் மன்னிப்பு கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலை வாரி குவித்து தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபத்தைக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டி தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ’மாநாடு’ திரைப்படத்தை பார்த்த இயக்குனர் செல்வராகவன் தாமதமாக இந்த படத்தை பார்த்ததற்கு மன்னிக்கவும் என்றும் இந்த படத்தை ரசித்து பார்த்தேன் என்றும் சிம்பு, எஸ் ஜே சூர்யா அருமையான நடிப்பு என்றும் நண்பர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட்பிரபு மற்றும் படக்குழுவினர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்றும் செல்வராகவன் கூறியுள்ளார்.