1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (15:41 IST)

வெந்து தணிந்தது காடு… பிஸ்னஸ் ரேட்டை உயர்த்தி ஷாக் கொடுக்கும் தயாரிப்பாளர்!

வெந்து தணிந்தது காடு படத்தின் வியாபார இலக்கை பல மடங்கு உயர்த்தி உள்ளாராம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

நடிகர் சிம்பு தனது திரையுலக வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸில் இருக்கிறார். இதையடுத்து அவர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மாநாடு வெற்றியைக் கணக்கில் கொண்டு வெளிநாட்டு விநியோக உரிமையை பல மடங்கு அதிகமாக்கி 10 கோடி ரூபாய் என்று வியாபாரம் பேசி வருகிறாராம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.