சசிகலாவைத் தாக்கும் வசனம் வைத்தது தவறு – சீமான் பல்டி !
தர்பார் திரைப்படத்தில் சசிகலாவைத் தாக்கும் விதமாக வசனம் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து நீக்கப்பட்டுள்ளது.
தர்பார் படத்தில் சிறையில் செல்போன் உபயோகிப்பது போன்ற காட்சி ஒன்றில் சிறையில் இருந்தபடியே ஷாப்பிங் கூட செல்லலாம் என்று ஒரு வசனம் வைக்கப்பட்டிருந்தது இது பெங்களூரு சிறையில் இருக்கும் அமமுக தலைவர் சசிகலாவை குறிப்பிடும் விதமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த வசனம் உடனடியாக படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இவ்வளவு பவரா என ஒருபுறம் கேள்வி எழுந்தது. இதுபற்றி கருத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘அவ்வாறு வசனம் வைத்தது தவறு. சசிகலா அதுபோல சிறையில் இருந்து வெளியே வந்தார் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அதுபோல வசனம் வைக்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில் பேசுவது தவறு. தம்பி முருகதாஸும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் எத்தனை நாட்கள் சிறையில் இருந்தார்கள்… இப்படி சொல்வதற்கு’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சசிகலா சம்மந்தமான குற்றச்சாட்டை சிறைத்துறை ஐ ஜி நிரூபித்ததை அடுத்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.