மந்தம் தட்டியதா "தர்பார்"? - நான்காம் நாள் வசூல் !

papiksha| Last Updated: திங்கள், 13 ஜனவரி 2020 (11:06 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் சென்னை உள்பட பல நகரங்களில் மாபெரும் வசூல் ஈட்டி சாதனை படைத்து வருகிறது.   
 
தமிழகம் முழுக்க முதல் நாளில் ரூபாய் 34.5 கோடி வசூல் செய்திருந்தது. இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 53 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. அதோடு கேரளா, ஆந்திரா, தெலங்கனா மற்றும் வட இந்திய மாநிலங்களில் இரண்டு நாட்கள் முடிவில் 38 கோடி ரூபாயும் வசூல் செய்து இந்தியா முழுதும் 69 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது . 
 
இந்நிலையில் தற்போது சென்னையில் நான்காம் நாள் நிலவரப்படி  ரூ. 7.28 கோடி வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இன்னும்  பொங்கல் விடுமுறை நாட்கள் தொடர்ந்து இருப்பதால் ஹிட் வசூலை ஈட்டி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் பல கோடிகளை கொடுத்த வாங்கிய விநியோகிஸ்தர்களுக்கு தர்பார் படம் நிச்சயம் நல்ல லாபம் ஈட்டி தரும். 


இதில் மேலும் படிக்கவும் :