வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (13:31 IST)

ஸ்ரீதேவி மரணத்தில் விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 
நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குளியல் தொட்டியில் அவர் இறந்ததால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்து வந்தனர்.
 
துபாய் போலீஸார் தீவிர விசாரணைக்கு பின்னரே உடலை ஒப்படைத்தனர். இதனால் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.
 
ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குநர் சுனில் சிங் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. துபாயில் போலீஸார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படும் எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.