வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (15:25 IST)

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்; தமிழக அரசு இடைக்கால மனு

உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரி தமிழகம் முழுவதும் பெரும் அளவில் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு கர்நாடகாவில் நடக்க உள்ள தேர்தலை காரணம் காட்டி வருகிறது. 
 
ஆனால் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
 
4 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா இந்த மாதம் தண்ணீர் திறந்து விட இயலாது என்று தெரிவித்துவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.