ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (08:43 IST)

மறைந்த இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சத்யராஜ் நடித்த ‘மை பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின் முதல் லுக் ரிலீஸ்!

ரெட்டசுழி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் சீதா, ரேகா, வர்ஷா பொல்லம்மா, தர்ஷன் ஆகியோர் நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்காக உருவாக்கப்பட்ட வெப் தொடர்தான் மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்.

ஆனால் இந்த தொடர் பாதி முடிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் தாமிரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் மீதித் தொடரை இயக்குனர் நிர்மல் குமார் இயக்கி முடித்தார். இப்போது எல்லாப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் இந்த சீரிஸ் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. நகைச்சுவை கலந்த குடும்ப வெப் தொடராக இந்த தொடர் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த சீரிஸின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.