ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (17:33 IST)

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி!

கமல்ஹாசனின் மூத்த அண்ணனான சாருஹாசன் ஒரு வழக்கறிஞர் ஆவார். கமல்ஹாசனைத் தொடர்ந்து அவரும் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதையும் அவர் வென்றுள்ளார்.

கடைசியாக அவர் தாதா 87 என்ற படத்தில் நடித்திருந்தார். வயது மூப்பு காரணமாக அவர் இப்போது ஓய்வில் இருக்கிறார். 93 வயதாகும் அவர் இப்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை சென்று பார்த்துள்ள அவரின் மகள் சுஹாசினி பகிர்ந்துள்ள பதிவில் “மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மகளின் அன்பால் அவர் குணமடைந்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.