யானையை விட்டு சிங்கத்துக்குத் தாவிய பிரபு சாலமன்… கவனம் ஈர்க்கும் மாம்போ போஸ்டர்!
இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்து அவரை புகழ் வெளிச்சத்தில் இருந்து மறைய வைத்தன. கடைசியாக அவர் இயக்கிய செம்பி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. போஸ்டரில் விஜய் ஸ்ரீஹரி ஒரு சிங்கக் குட்டியோடு கொஞ்சி விளையாடுவது போல உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் தாய்லாந்தில் நடத்தப்பட்டுள்ளது. அதற்காக நிஜ சிங்கத்துடனே ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. படத்துக்கு மாம்போ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தயாரிக்கிறது.