வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (15:13 IST)

பகைவனுக்கு அருள்வாய் படத்தை முடித்த சசிகுமார்! வெளியிட்ட புகைப்படம்!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார், அதன் பின்னர் ஈசன் என்ற ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். ஆனால் அவர் நடித்த படங்கள் ஹிட் ஆனதால் தொடர்ந்து நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம், சிங்கமடா, ராஜவம்சம்m, நா நா, பரமகுரு, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ’பகைவனுக்கு அருள்வாய்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அனிஸ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘திருமணம் என்னும் நிக்கா’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சசிகுமாரோடு வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், சுப்ரமண்யபுரம் ஸ்டைலில் 1980 களில் நடக்கும் கதையாகவும், தற்போது நடக்கும் கதையாகவும் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து சசிகுமார் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘அனிஷ் இயக்கத்தில் பகைவனுக்கு அருள்வாய் படப்பிடிப்பு இனிதே நிறைவடந்தது! இக்குழுவினருடன் பணி புரிந்தது மிக்க மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார்.