சசிகுமாரின் ராஜவம்சம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம் படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் நாயகனாக நடித்துள்ள ராஜவம்சம் படத்தில் நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரத்தில் சதீஷ், யோகிபாபு, மனோபாலா, தம்பிராமையா, ராதாரவி, ரேகா, சுமித்ரா, நிரோஷா உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை டிடி ராஜா தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ராஜ வம்சத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மார்ச் 12 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்துள்ளது படக்குழு.
மேலும் இப்படத்தில்தான் மொத்தம் 49 கலைஞர்களை வைத்து இயக்குநர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.