திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 18 மார்ச் 2023 (08:36 IST)

மக்களின் பாராட்டைப் பெற்ற அயோத்தி திரைப்படம்… பிற மொழிகளில் ரீமேக் பேச்சுவார்த்தை!

சசிகுமார், புகழ் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘அயோத்தி’ திரைப்படம். சமீபத்தில் இந்த படம் வெளியாகி பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் இந்த படம் இப்போது பார்வையாளர்களைக் கவர தொடங்கியுள்ளது. இந்த வாரம் வெளியான படங்களில் மற்ற படங்கள் பெரிதாகக் கவராத நிலையில் சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் என்ற பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.

இந்நிலையில் இப்போது மலையாளத்தில் டப் செய்யப்பட்டு இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ள, அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியில் அஜய் தேவ்கன்னும், தெலுங்கில் வெங்கடேஷும் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.