வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (14:58 IST)

விஷாலின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்… செம்ம காம்பினேஷன் ஆச்சே!

கார்த்திக் சுப்பராஜ் , தன்னுடைய ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமாக படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கிய DSP படத்தைத் தயாரித்திருந்தார். இந்த படம் படுதோல்விப் படமாக அமைந்தது. இந்நிலையில் அடுத்து அவர்  விஷால் நடிப்பில் உருவாகும் படத்தை தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தையும் முதலில் பொன்ராம்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த படத்தை இயக்க பாண்டிராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. பாண்டிராஜின் கடைசிப் படமான எதற்கும் துணிந்தவன் படம் தோல்விப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. விஷால் பாண்டிராஜ் கூட்டணியில் ஏற்கனவே கதகளி என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.