1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 30 அக்டோபர் 2018 (10:04 IST)

பாடகியாக மாறிய ஜேசுதாஸ் பேத்தி

நீண்ட இசைக்குடும்பமான ஜே.ஜே.ஜேசுதாசின் மகனை அடுத்து அவருடைய பேத்தியும் தற்போது பாடகியாகியுள்ளார். அவருக்கு மலையாள திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஜேசுதாசின் தந்தை அகஸ்டின் ஜோசப் என்பவர் மலையாள திரையுலகில் ஒரு பிரபலமான பாடகர், அவரை அடுத்து ஜேசுதாசும், அவரது மகன் விஜய்ஜேசுதாசும் புகழ்பெற்ற பாடகர்களாக இருக்கும் நிலையில் தற்போது ஜேசுதாசின் பேத்தியும் விஜய்ஜேசுதாசின் மகளுமான அமேயா என்ற சிறுமியும் பாடகியாக மாறியுள்ளார்.

மலையாள திரைப்படமான 'சியாமராகம்' என்ற படத்தில் ஜேசுதாசின் பேத்தி அமயா என்பவர் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலில் ஜேசுதாஸ் மற்றும் விஜய்ஜேசுதாஸ் ஆகியோர்களும் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது. நான்கு தலைமுறைகளாக இசைத்துறையில் சேவை செய்து வரும் ஜேசுதாஸ் குடும்பத்திற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.