சர்கார்-விசுவாசம் ஒரே நாளில் வெளியாகிறது!
தளபதி விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல் தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இரு பெரும் நடிகர்களின் படங்களின் முன்னோட்டங்கள் ஒரே நாளில் வெளியாகக் கூடும், என்ற தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்பாகவே தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.