1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (11:27 IST)

இதுதான் விஜய்யின் பெஸ்ட் படம்: பிரபுதேவா புகழாராம்

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில், நடிகர் பிரபு தேவா நடிப்பில் நடனத்தை மையப்படுத்தி உருவாக்கியுள்ள திரைப்படம்  ’லக்ஷ்மி' .  வருகிற ஆகஸ்ட் 24-ம்  தேதி வெளியாகிறது. பிரபுதேவா உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ’பேபி’ தித்யா, கோவை சரளா, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் ’லக்ஷ்மி’  படக்குழுவினர் பத்திரிகையாளரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:
 
“பிரபு தேவா  ஒரு பெரிய லெஜெண்ட். அவருடன் நடிக்கிறப்ப ரொம்ப பெருமையாக இருந்தது. நடிகர், நடன இயக்குநர் எல்லாத்தையும் தாண்டி அவர்கிட்ட  நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தது. ’லக்ஷ்மி’ படத்துல வேலைச் செஞ்ச எல்லா குழந்தைகளும் மிகவும் திறமைசாலிகள். படம் கண்டிப்பாக  குழந்தைகளுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும்”.
 
நடிகர் பிரபுதேவா:
 
“இந்த கதைய சொல்லுறதுக்கு முன்னாடி விஜய் ஒரு டான்ஸ் படம் பன்னலாம்னு ஐடியா சொன்னாரு. ‘பன்னா இந்தியா அளவுல பன்னனும்னு சொன்னேன்’  அதுக்கு ஏத்த மாதிரி கதையும் அமைஞ்சிருக்கு. ஏ.எல். விஜய் எடுத்த பெஸ்ட் படம் இதுதான். நான்  நிறைய நல்ல படங்கள் பண்ணிருக்கேன். எனினும் இது  தான் ஒரு டைரக்டர்  மூவியா இருந்தது. இந்தியா முழுவதும் டான்ஸ் நிகழ்ச்சிகளில் சிறப்பாக ஆடி அசத்திய  குழந்தைகளை தேர்ந்தெடுத்து இந்த படத்துல  நடிக்க வச்சிருக்கோம். டான்ஸ் மட்டுமல்ல பல இடங்கள்ல அழவும் வச்சிருக்காங்க. நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் ஜாலியாக இருக்கும்”.
 
இயக்குநர் விஜய்:
 
”தேவி படம் பன்னிட்டு இருக்கும்போது தான் இந்த படத்தைப் பற்றி யோசனை வந்தது. பிரபு தேவா சார் தான் இந்த படத்துக்கு பக்க பலமாக இருந்தது.  நடிக்கறதோடு மட்டுமில்லாம படம் முடியற வரை செட்ல இருந்து உற்சாகப்படுத்திட்டே இருப்பாரு. ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்துல அவங்களுக்கு டான்ஸ் ஃபோர்ஷன் இல்லைனாலும், அவங்களுக்கும் தித்யாவுக்குமான பாண்ட் அற்புதமாக இருந்தது. தித்யாவும் மத்த எல்லா குழந்தைகளுமே நல்ல ஃபெர்பார்ம்  பண்ணிருக்காங்க. டான்ஸ் படத்துக்கு மியூசிக் ரொம்ப முக்கியம். சாம் சிறப்பாக இசை அமைச்சிருக்கார். படம் நிச்சயம் ஒரு நல்ல டான்ஸ் மூவியாக இருக்கும்.