திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:10 IST)

விஜய் சேதுபதியின் சீதக்காதி எப்போது ரிலீஸ்?

விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் நடித்துள்ள படம் சீதக்காதி. இதனை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. கோவிந்த மேனன் இசையமைத்துள்ளார். 
இந்த படத்தில் விஜய்சேதுபதி அரசியல்வாதியாக நடித்திருப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் சீதக்காதி குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
இந்த படம் விஜய் சேதுபதியின் 25 வது படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது. இந்நிலையில் சீதக்காதி படம் வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.