என் ரெண்டு பொண்டாட்டியையும் எனக்கு காமிங்க: கமலிடம் வேண்டுகோள் விடுத்த சரவணன்

Last Modified ஞாயிறு, 28 ஜூலை 2019 (20:01 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேறவுள்ள நிலையில் அந்த போட்டியாளர் யார் என்பது குறித்த விவாதத்துடன் கூடிய புரமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது

இந்த வீடியோவில் தன்னை வெளியேற்ற பரிந்துரை செய்யுமாறு கமல்ஹாசனிடம் சரவணன் கூறுகிறார். ஆனால் அதற்கு கமல்ஹாசன் மறுக்க, உடனே சரவணன் 'குறைந்தபட்சம் என்னுடைய குழந்தையை கண்ணில் காட்டுங்கள்' என்று கூறிய பின்னர் அதை செய்துவிடலாம். அதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று கமல் கூறுகிறார்.

உடனே எனது இரண்டு பொண்டாட்டிகளோடு சேர்த்து குழந்தையை காண்பியுங்கள் என்று கூறினார். இதனை அடுத்து அவரை கிண்டல் செய்த கமல்ஹாசன் 'பாசத்தில் ஆரம்பித்து காதலில் முடிக்கிறார் பாருங்கள் சரவணன்' என்று கூறியதும் அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் கமல்ஹாசனின் நகைச்சுவையை ரசித்து சிரித்தனர்.
இன்றைய நிகழ்ச்சியின் இறுதியில் அபிராமி, சாக்சி, சரவணன், கவின், மீராமிதுன் ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ளார். நமக்கு கிடைத்த தகவலின்படி மீராமிதுன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :