திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஜூலை 2019 (10:29 IST)

இனிமேல் எல்லாவற்றையும் தட்டிக்கேட்பேன்: சாண்டி சபதம்

பிக்பாஸ் வீட்டின் ஒரே எண்டர்டெயினர் சாண்டிதான். அவர் கலகலப்புடன் நகைச்சுவையாக எதையாவது சொல்லி கொண்டிருப்பதால் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அவ்வப்போது சிரித்து வருகின்றனர். ஆனால் சாண்டி, மறைமுகமாக மீராவுக்கு சப்போர்ட் செய்வதாகவும் பலருக்கு சந்தேகம் உள்ளது
 
குறிப்பாக மீரா யார் மீதாவது குற்றச்சாட்டு கூறும்போது சாண்டி வாயை திறப்பதே இல்லை. இதனை இன்று ஒரு பார்வையாளர் தொலைபேசியில் சாண்டியை கேட்டே விட்டார் அதற்கு முதலில் சாண்டி சமாளித்தாலும் அதன்பின்னர் கமல் கட்டாயப்படுத்தியதால் வேறு வழியின்றி இனிமேல் தவறை தட்டிக்கேட்பேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். எனவே இனிமேல் சண்டை நடக்கும்போது சாண்டியின் தலையிடூம் இருக்கும் என தெரிகிறது
 
மேலும் நேற்று சேரன் எவிக்சனில் இருந்து காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று இருவர் காப்பாற்றப்பட்டு அதன்பின்னர் வெளியேறும் நபர் குறித்த அறிவிப்பு வரும் என தெரிகிறது. இன்று மீராமிதுன் வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் இருந்தாலும், அவரை ரகசிய அறையில் தங்க வைத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைக்கவும் பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ரகசிய அறையை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மீண்டும் மீரா, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால் அவர் கிட்டத்தட்ட கடைசி வரை வீட்டில் இருப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றே தெரிகிறது