மகள்களை பெற்றோரே நரபலியிட்ட கொடூரம்: மீண்டும் உயிருடன் திரும்புவார்கள் என பிதற்றல்

விரைவில் டிஜிட்டல் வாக்காளர் அட்டை:
siva| Last Updated: திங்கள், 25 ஜனவரி 2021 (08:12 IST)
விரைவில் டிஜிட்டல் வாக்காளர் அட்டை:
அற்புதங்களை நிகழ்த்துவதாக கூறி பெற்றோரே தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆந்திர மாநிலட்தில் உள்ள மதனபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது இரண்டு மகளை நரபலி கொடுத்து உள்ளனர். அற்புதங்கள் நிகழ்த்தியதாக கூறி தங்கள் இரண்டு மகளை நரபலி கொடுத்த அவர்கள் ஓர் இரவு பொறுமையாக இருந்தால் மகள்கள் மீண்டும் உயிருடன் வருவார்கள் என்று பிதற்றிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது
கல்லூரி முதல்வரான தந்தை உதவி பேராசிரியையான தாய் ஆகிய இருவரும் நன்கு படித்தவர்களாக இருந்தும் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் மூலம் அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறி தங்கள் சொந்த மகளையே நரபலி கொடுத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து போலீசார் இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் போது கண்டிப்பாக தங்கள் மகள்கள் உயிருடன் திரும்புவார்கள் என பிதற்றி கொண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :