திருமணம் குறித்து வெளியான தகவல்….ஸ்ருதிஹாசன் பதில்

sruthi
Sinoj| Last Updated: திங்கள், 25 ஜனவரி 2021 (23:49 IST)

சூர்யா நடித்த
ஏழாம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகியுள்ளார்.


தற்போது ஸ்ருதி ஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார். ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இப்படம் விரையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் இணையதளங்களில் பரவிவருகிறது.

ஆனால் இதுகுறித்த கேள்விக்கு அவர் எனக்கு திருமணம் என்று வெளியாகும் தகவல் உண்மையில்லை என்று கூறியுள்ளார் மேலும் முன்னாள் காதலரை வெறுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிஹாசனும் மைகேல் கோர்சலும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :