திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 ஜனவரி 2021 (20:24 IST)

சிம்புவின் கல்யாணம் ஈஸ்வரன் கையில் - டி.ராஜேந்தர்

தமிழ்` சினிமாவில் இளம் நடிகர்களின் ஒருவர் சிலம்பரசன, இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் ஈஸ்வரன். இப்படம் விஜய்யின் மாஸ்டர் படத்துடன் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

முன்பு இருந்த சிம்பு போன்று இல்லாமல் இப்போதும் படப்பிடிப்புக்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே சென்றுவிடுவதாகத் தகவல் வெளியான நிலையில், அவர் ஆன்மீகத்தில்  ஈடுபட்டுவருவது போன்ற புகைப்படங்கள் வெளியானது.

இந்நிலையில் அவரது தந்தை டி.ராஜேந்தர் அரசியலில் ஈடுபட்டுவரும் அதேநேரம் தன் மனைவியையும் அவர் அரசியலுக்குத் தயார் படுத்திவருகிறார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அவரை நிரிவாகிகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.அதாவது டி.ராஜேந்தர் தொடங்கியுள்ள தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அவரது மனைவி உஷா ராஜேந்தர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுசம்பந்தமாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் சிம்புவின்  திருமணம் குறித்துக் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் சிம்பிவின் திருமணத்தை ஈஸ்வரன் கையில் ஒப்படைக்கிறேன் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.