1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (14:46 IST)

சந்தானத்தின் ’’பாரிஸ் ஜெயராஜ்’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு !

நடிகர் சந்தானத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தின் ’’படத்தின்  ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
.
காமெடி நடிகரான சந்தானம் முன்னணி நடிகர்களுக்கு இணையான காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆகி தொடர்ச்சியாக ஹீரோ வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன.

#ParrisJeyaraj
இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குநர் ஜான்சன். கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தை கே.குமார் என்பவர் தயாரித்துள்ளார்.  இப்படம் காமெடி ஜர்னலில் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.Kumarkarupannan

இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கனவே சிங்கில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கானா பாடலான இது வைரலானது.iamSandy_Off
 #ParrisJeyarajFromFeb12 #JohnsonK #LarkStudios @Kumarkarupannan @Music_Santhosh @ArthurWisonA @iamSandy_Off

சமீபத்தில், இப்படத்தின் டிரைலரை நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வைரலானது. சந்தானத்திற்கு இப்படம் பெரும் வெற்றியாக அமையும் எனப் பலரும் கருத்து தெரிவித்து அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹீரோக்கள் எல்லோரும் வரிசையாக தியேட்டர்களில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்யத்திட்டமிட்டுள்ள நிலையில் சந்தானத்தில் பாரிஸ் ஜெயராஜ் படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.