பாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு இருக்கும் டிமாண்ட்… காரணம் இதுதானாம்!
சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு விலைபோகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
காமெடி நடிகரான சந்தானம் முன்னணி நடிகர்களுக்கு இணையான காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆகி தொடர்ச்சியாக ஹீரோ வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குநர் ஜான்சன். கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தை கே.குமார் என்பவர் தயாரித்துள்ளார். இப்படம் காமெடி ஜர்னலில் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. கானா பாடகராக இந்த படத்தில் சந்தானம் நடித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணின் இசை பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தானத்தின் கடைசி இரண்டு படங்களான டகால்டி மற்றும் பிஸ்கோத் ஆகிய இரண்டு படங்களும் தோல்வி அடைந்தாலும், இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிஒயுள்ளனர் விநியோகஸ்தர்கள். அதற்குக் காரணம் சந்தானம் மற்றும் ஜான்சன் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற A1 திரைப்படம்தான் என சொல்லப்படுகிறது.