செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (09:15 IST)

விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்… கடந்த வார ரிலீஸின் வின்னர் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ்…

சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இப்போது அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. கடந்த வாரம் கிட்டத்தட்ட 8 படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் மட்டுமே பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

மேலும் இப்போது அந்த படத்துக்கு திரைகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டும் வருகிறது. வார இறுதி நாட்களில் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல்லாக அமைந்துள்ளன.