வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (14:18 IST)

பெரிய நடிகராக மாற இதைச் செய்து கொண்டிருக்கிறேன்- சந்தானம்

தமிழ் சினிமாவின் பிரபல  நடிகர் சந்தானம். இவர், சிம்புவின் மன்மதன் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர்,   விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல  நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துப் புகழ் பெற்றார்.

அதன்பின்னர், கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான். தில்லுக்கு துட்டு,  சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, ஏ 1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், சபாபதி, குளுகுளு, ஏஜெண்ட் கண்ணாயிரம், ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில், கிக் மற்றும் டிடி ரிடர்ன்ஸ் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. விரைவில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், சினிமாவின் தன் பயணம் குறித்து  நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,  ‘’நான் இப்போது பெரிய நடிகர்களுக்கு இணையாக இல்லை; ஆனால், அந்தத் தகுதியை அடைய உழைத்துக் கொண்டிருக்கிறேன். இனி   நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கவுள்ளேன்..பெரிய நடிகராக மாற உழைக்கிறேன் ‘’ என்று தெரிவித்துள்ளார்.