செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 30 ஜூலை 2023 (09:10 IST)

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘மன்னவன் வந்தானடி’ ரிலீஸ் ஆகுமா? அவரே அளித்த பதில்!

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க ஆரம்பிக்கப்பட்ட படம் மன்னவன் வந்தானடி மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. காதல் படமாக தயாரான இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் நடந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனைக் காரணமாக பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.

அதன் பிறகு அந்த படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. இந்நிலையில் இப்போது சந்தானம் அளித்த ஒரு நேர்காணலில் அவரிடம் மன்னவன் வந்தானடி படத்தின் தற்போதைய நிலை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “அந்த படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் அளவுக்கு முடிந்துவிட்டது. இன்னும் 10 நாட்கள் ஷூட்டிங்தான் மீதமுள்ளது.

அந்த படத்திலும் நான் காமெடியைக் குறைத்துக் கொண்டு நடித்திருந்தேன். அந்த படம் இனிமேல் ரிலீஸ் ஆகவேண்டுமென்றால் அது தயாரிப்பாளரின் கையில்தான் உள்ளது. எதிர்காலத்தில் அது நடக்கிறதா என்று பார்ப்போம்” எனக் கூறியுள்ளார்.