வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:16 IST)

துக்ளக் தர்பார் படத்துக்காக முதல்வரை சந்தித்தாரா விஜய் சேதுபதி?

துக்ளக் தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ள நிலையில் அதில் எதுவும் பிரச்சனைகள் வந்துவிடக் கூடாது என்றுதான் முதல்வரை விஜய் சேதுபதி சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்தப்படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கினாள் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் நடிகை அதிதிராவ்விற்கு கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த படத்தில் நடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் "துக்ளக் தர்பார்" படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து இப்போது அந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கியுள்ளன.

800 பட விவகாரம் சம்மந்தமாக விஜய் சேதுபதி மேல் பல தரப்பினர் இன்னும் கோபமாக உள்ளனர். இதனால் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து ஏதேனும் போராட்டங்கள் நடத்தினால் பணிகள் பாதிக்கப்படும் என்பதால் பாதுகாப்பு வேண்டிதான் நேற்று விஜய் சேதுபதி தமிழக மக்களை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.