ரோட்ல நின்னு பண்ணு காசு குடுப்பாங்க... கீழ்த்தரமாக நடிகையை விமர்சித்த ரசிகர்!
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.
தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "தலைகீழாக நின்றபடி கடினமான ஒர்க் அவுட் ஒன்றை அசால்டாக செய்து பிரம்மிக்க வைத்துவிட்டார். இதற்கு இணையவாசி ஒருவர் " ரோட்ல இந்த சர்க்கஸ் பண்ணினா நல்ல கலெக்ஷன் கன்பார்ம் என கூறி கிண்டலடித்துள்ளார். இதற்கு முன்னர் கூட இதே போல் ஒருவர் சொன்னதற்கு சம்யுக்தா ஹெக்டே மக்களை மகிழ்விக்கும் அந்த நல்ல மனிதர்களின் உணர்வு உன்னை போன்ற ஆட்களுக்கு தெரியாது என பளார் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.