'காப்பான்' படத்தில் சமுத்திரக்கனியின் ரோல் என்ன?
கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' படத்தில் நடிகர் மோகன்லால் பிரதமர் கேரக்டரில் நடித்து வருவதாகவும், இந்த படத்தில் அவருடைய கேரக்டரில் பெயர் சந்திரகாந்த் வர்மா என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தில் பிரதமரின் பாதுகாவலராக சூர்யா நடித்து வரும் நிலையில் இன்னொரு பாதுகாவலராக சமுத்திரக்கனி நடித்து வருவதாகவும், இருவரும் இணைந்து பிரதமருக்கு ஏற்பட்ட ஆபத்தை எப்படி சமாளிக்கின்றனர் என்பதுதான் கதை என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனியின் கேரக்டர் சூர்யாவுக்கு இணையாக இயக்குனர் உருவாக்கியுள்ளதால் இந்த படம் சமுத்திரக்கனிக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும் வரும் ஏப்ரலில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.