ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 நவம்பர் 2024 (20:45 IST)

மன்னிப்பு கேட்டும் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு! பரபரப்பு தகவல்..!

நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்ட நிலையில், தனது சமூக வலைதளம் மூலம் அவர் தெலுங்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இருப்பினும், அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசும்போது, தெலுங்கு மக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என்று புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், அவர் நீதிமன்றத்தில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அகில இந்திய தெலுங்கு  சம்மேளனம்  இயக்கத்தின் சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மதம், இனம் குறித்து இருவேறு பிரிவு குறித்து மக்களிடையே பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Edited by Siva