புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (17:41 IST)

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த நடிகை கஸ்தூரி..!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசிய போது தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார்.
 
மேலும் திமுக பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் அவருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். தெலுங்கு மக்களின் உணர்வு புண்பட்டு இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறேன் என்று கூறிய நடிகை கஸ்தூரி, எனது கருத்துக்கள் குறிப்பிட்ட சிலரை சார்ந்து மட்டுமே தெரிவித்தது நான் எப்போதும் உண்மையான தேசியவாதி ஆந்திர மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
 
நவம்பர் மூன்றாம் தேதி தனது உரையில் தெலுங்கு மக்கள் குறித்த எனது கருத்துக்களை திரும்ப பெறுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தெலுங்கு மொழிக்கும் எனக்கும் மிக நெருக்கமான தொடர்பு உள்ளது என்றும் நாயக்கர் மன்னர்கள், கட்டபொம்மன் நாயக்கர், தியாகராஜ கீர்த்தனை பாடி புகழ்பெற்ற நாட்களை ரசித்து வளர்ந்தவள் நான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
என்னுடைய தெலுங்கு திரையுலக வாழ்க்கையை நான் மிகவும் மதிக்கிறேன் என்று தெலுங்கு மக்கள் எனக்கு பெயர் புகழ் மற்றும் அன்பு கொடுத்துள்ளனர் என்றும் நான் வெளிப்படுத்திய கருத்துக்கள் குறிப்பிட்ட நபர்களை சார்ந்ததே தவிர தெலுங்கு மொழி பேசும் சமூகத்தின் சார்ந்தவை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
எனது தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை என்றும் நான் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran