1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (23:40 IST)

கமலுக்கு ரஜினி கொடுத்த நாசூக்கான பதிலடி

ரஜினியும் கமலும் விரைவில் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் ரஜினியை கமல் இரண்டு முறை நாசூக்காக விமர்சனம் செய்துள்ளார்.



 
 
ஏற்கனவே பதிவு செய்த ஒரு டுவீட்டில் 'விம்மாமல் பம்மாமல், ஆவன செ்ய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே.ஓடி எனைப்பின்தள்ளாதே களைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்' அதாவது நீ முந்தி போகாதே என்னுடன் வா' என்று ரஜினியை மறைமுகமாக கூறியதாக புரிந்து கொள்ளப்படுகிறது. அதேபோல் 'முரசொலி விழாவில் பங்கேற்ற போது தற்காப்பை விட தன்மானம் முக்கியம் என்று கூறி ரஜினியை குத்திக்காட்டினார்.
 
அதுமட்டுமின்றி சமீபத்திய பல பேட்டிகளில் ரஜினி வந்தால் கைகோர்த்து கொள்வேன்' என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ரஜினி, 'அரசியலில் வெற்றி பெறுவது எப்படி என்ற ரகசியம் கமலுக்கு தெரிந்திருக்கலாம். அதை கேட்டாலும் அவர் இப்போது சொல்லமாட்டார். ஒரு வேளை ஒரு 2 மாதங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ. திரையுலகில் மூத்த அண்ணன் நீங்கள், நான் உங்கள் தம்பி எனக்கு இந்த ரகசியத்தை சொல்லுங்கள் என்றால் நீ கூடவா சொல்கிறேனு சொல்கிறார்' என்று கூறினார். 
 
ஆனால் கடைசி வரை கமலுடன் கைகோர்த்து அரசியலுக்கு வருவேன்' என்று அவர் கூறவில்லை. எனவே தனிப்பாதை தான் எனது பாதை என்பதை கமலுக்கு அவர் நாசூக்காக பதிலடி கொடுத்துவிட்டார் என்றே கருதப்படுகிறது.