ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (21:55 IST)

சமந்தாவுக்காக எச்சரிக்கையை மீறிய தயாரிப்பாளர்: ரூ.15 கோடி நஷ்டம் என தகவல்

சமந்தாவுக்காக எச்சரிக்கையை மீறிய தயாரிப்பாளர்
நடிகை சமந்தா நடித்த படத்தை தயாரித்த பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் ரூபாய் 15 கோடி வரை நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமந்தா, சர்வானந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ’ஜானு’. இந்த படம் தமிழில் சூப்பர் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழில் இயக்கிய பிரேம்குமார் தான் தெலுங்கிலும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படம் தயாரானபோதே இந்த படம் தெலுங்கில் ஓடாது என்றும் அவருடைய நண்பர்கள் உள்பட திரையுலகினர் பலர் எச்சரித்தனர். இருந்தும் சமந்தாவை முழுக்க முழுக்க நம்பி அவர் இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் நண்பர்கள் எச்சரித்தது போலவே இந்தப் படம் தெலுங்கில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
இப்போதைய கணக்கின்படி தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களுக்கு ஒரு ரூபாய் 15 கோடி வரை நஷ்டம் ஏற்படலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக திரைப்படங்களை தயாரித்து வரும் தில் ராஜூ, இதுபோன்ற ஒரு நஷ்டத்தை இதுவரை சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது