செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (14:20 IST)

’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் நயன்தாரா-சமந்தா: அதிகாரபூர்வ அறிவிப்பு

’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் நயன்தாரா-சமந்தா
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் ’மாஸ்டர்’ படம் முதலில் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தான் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இடையில் சில பிரச்சனைகள் காரணமாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து திடீரென விலகி விட்டார். அதன் பின்னர் இந்த படத்தை தயாரித்து வந்த இணை தயாரிப்பாளர் லலிதகுமார் இந்த படத்தின் தயாரிப்பாளராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மாஸ்டர் படத்தை தயாரித்து வரும் லலித்குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் படமொன்றின் அறிவிப்பு வெளியானது. ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தைதான் மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன தனது சமூக வலைத்தளத்தில் லலித்குமாரும் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய்சேதுபதியுடன் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் தனித்தனியே இணைந்து நடித்து இருந்தாலும் நயன்தாரா-சமந்தா ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதால் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது