1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (10:10 IST)

முத்தமிட்டா கொரோனாவா? சமந்தா முத்தத்தால் மரண பீதி!!

சமந்தா முத்தமிட்ட பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் முத்த பீதியை கிளப்பி வருகின்றனர் இணையவாசிகள். 
 
பிரபல நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழியான உடற்பயிற்சி நிபுணர் மற்றும் மாடல் அழகியான ஷில்பா ரெட்டிக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் இதில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும் எனவும் டிப்ஸ் கொடுத்துள்ளார். 
 
அந்த வீடியோவில், சில நாட்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு ஒரு நண்பர் வந்தார். அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அவர் ஊருக்குப் போய் பரிசோதனை செய்தபோது, கொரோனா உறுதியானது. அதனால் எங்கள் குடும்பத்தில் நான் உட்பட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். 

அதில் எனக்கும் எனது கணவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் கொரோனா பாதிப்பிற்காக அறிகுறிகள் தென்படவில்லை. இருப்பினும் முறையாக உணவுடன் பாதிப்பில் இருந்து மீண்டுவர முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமந்தா தன்னை முத்தமிடுவது போல உள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என தெரியாத நிலையில், இணையவாசிகள் முத்தத்தால் கொரோனா என சமந்தா குறித்து முத்த பீதியை கிளப்பி வருகின்றனர்.