ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (20:29 IST)

பிரபல நடிகையின் தோழிக்கு கொரோனா

பிரபல நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழியான உடற்பயிற்சி நிபுணர் மற்றும் மாடல் அழகியான ஷில்பா ஷெட்டிக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இது குறித்து ஷில்பா ஷெட்டி வெளியிட்டுள்ள வீடியோவில், சில நாட்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு ஒரு நண்பர் வந்தார். அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அவர் ஊருக்குப் போய் பரிசோதனை செய்தபோது, கொரோனா உறுதியானது. அதனால் எங்கள் குடும்பத்தில் நான் உட்பட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம் அதில் எனக்கும் எனது கணவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் கொரோனா பாதிப்பிற்காக அறிகுறிகள் தென்படவில்லை. இருப்பினும் முறையாக உணவுடன் பாதிப்ப்பில் இருந்து மீண்டுவர முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுக்கு இவர் தான் பிட்னெஸ் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.