செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 25 ஜூன் 2020 (16:15 IST)

முதன்முறையாக அண்ணன்களுடன் சமந்தா வெளியிட்ட புகைப்படம்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார்.
 
பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது சிறுவயது போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் கை குழந்தையான சமந்தாவை அவரது அம்மா தூக்கி வைத்திருக்க உடன் இரண்டு அண்ணன்களான ஜொனதன் பிரபு , டேவிட் பிரபு கெத்தா போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

We grow in different directions, yet our roots remain as one ... Missing ♥️

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on