பாலிவுட் மட்டும் வேண்டாம்… சமந்தாவின் பிடிவாதத்துக்குக் காரணம் இதுதானாம்!

Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (13:08 IST)

நடிகை சமந்தா தான் நடித்த யுடர்ன் படத்தின் பாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்துக்குப் பின்னரும் இரு மொழிகளிலும் பிஸியாக நடிக்கும் அவர் பாலிவுட் படங்களுக்கு மட்டும் நோ சொல்லிவிடுகிறாராம். அதற்குக் காரணம் அங்கு சென்றால் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்த முடியாது என அஞ்சுகிறாராம். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தென்னிந்திய நடிகைகளுக்கு பெரிதாக பாலிவுட்டில் வரவேற்புக் கிடைப்பதில்லை என்பதாலும்தானாம்.இதில் மேலும் படிக்கவும் :