‘மாஸ்டர்’ இந்தி ரீமேக் படத்தை இயக்குவது இந்த தமிழ் நடிகரா?

master
‘மாஸ்டர்’ இந்தி ரீமேக் படத்தை இயக்குவது இந்த தமிழ் நடிகரா?
siva| Last Modified செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (21:48 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஒரு சில பிரபல பாலிவுட் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் பிரபல நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் சல்மான்கான் ஆர்வம் காட்டி வருவதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை அவரிடம் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குவது பிரபுதேவா என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பிரபுதேவா, சல்மான்கான் நடித்த படங்களை இயக்கியுள்ளார் என்பதால் அவர் இந்த படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி வரும் வரை பொறுமை காப்போம்


இதில் மேலும் படிக்கவும் :