செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (16:50 IST)

ஷாருக்கானின் ''ஜவான்'' பட டிரைலரை பாராட்டிய சல்மான்கான்

shah rukh  khan - salman khan
இந்தி சினிமா சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜவான்.

உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தில் பிரிவியூ வீடியோ மற்றும் டிரெயிலர் வெளியாகி இணையதளத்தில் டிரெண்டிங் ஆகியுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இந்த டிரைலரை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜவான் பட டிரைலரை பாலிவுட் மற்றொரு சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பாராட்டி தன் சமூக வலைதள பக்கத்தில்  அவுட் ஸ்டாண்டிங் டிரைலர் என்று பாராட்டியுள்ளார். மேலும், இந்த வகையான படத்தை தியேட்டரில் மட்டும்தான் காண வேண்டும். அதுவும் முதல் நாளில் இப்படத்தைப் பார்க்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ஷாருக்கான்’’ உங்கள் வாழ்த்திற்கு  நன்றி …முதல் டிக்கெட்டை புக் செய்தாயிற்று என ‘’தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார்.