1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Censor certificate for Atlee Shah Rukh Khan Jawan actor release trailer

அட்லீ- ஷாருக்கானின் ''ஜவான்'' படத்திற்கு சென்சார் சான்றிதழ்...! நடிகர் விஜய் வெளியிடும் டிரைலர்?

Jawan
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், இயக்குனர்  அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ஜவான்.

இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில்  விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி  உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் தமிழில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் படத்திற்கு இன்று மத்திய சென்சார் போர்ட்டு  சான்றிதழ் வழங்கியுள்ளது.

அதன்படி,  இப்படத்தில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும், இப்படத்தின் டிரைலர் 2 நிமிடம் 15 நொடிகளுக்கு இருக்கும் எனவும் இந்த டிரைலரை  நடிகர் விஜய்யை வைத்து  வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்  கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் தியேட்டர் வெளியீட்டு உரிமை  மட்டும் ரூ.250 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

எனவே விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரையில்
பறந்து வந்த பச்சை கிளி... சேலையில் செம பீலிங்ஸ் ஏத்தும் கீர்த்தி ஷெட்டி!