செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (12:46 IST)

காதலில் கொக்கி போடும் சாக்‌ஷி; தடுமாறும் கவின்

பிக்பாஸ் சீசன் 3-ன் ப்ரொமோ வீடியோவை சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில் சாக்‌ஷியும் கவினும் தனிமையில் உடகார்ந்து  பேசிக் கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் கடலை போடும் கவின் இதுவரையில் யாரைத்தான் காதலிக்கிறார் என்று  தெரியாத நிலையில், தற்போது சாக்‌ஷியிடம் காதல் வலையை விரித்துள்ளார்.
சாக்‌ஷி கவினின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். மேலும் நீ உன்னோட மனதை தொட்டுபாரு பதில்  கிடைக்கும் என்று வம்புக்கு இழுப்பதோடு, சரி என்னிடத்தில் பேச வேண்டாம் என்று கூற, டென்ஷன் ஆன கவின் மத்தியானம் வரைக்கும் உன்கூடத்தான் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன் என கூறி சமாளிக்கிறார். 
விடாப்பிடியாக பேசிய சாக்‌ஷி உனக்கு திடீரென லாஸ்லியா உனக்கு நல்லவளா தெரிகிறது உண்மைதான? என்று கேள்விக்கேட்கிறார். அதற்கு  என்ன பேசுற நீ. எல்லா டீம்மிடமும் எப்படி பேசுகிறனோ அதே போலத்தான் பேசுகிறேன் என பதில் கூறுகிறார்.