புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 6 மே 2020 (13:37 IST)

தன் செல்ல மகனுக்கு ஹேர்கட் செய்த நட்சத்திர நடிகர் - வைரல் புகைப்படம் இதோ!

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் தற்போது பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான சையப் அலி கான் தனது மகன்  தைமூர்'க்கு வீட்டில் இருந்தபடியே ஹேர் கேட் செய்த புகைப்படத்தை அவரது மனைவியும் பிரபல நடிகையுமான கரீனா கபூர் தனது இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Haircut anyone?