”விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் ”கான்” நடிகர்கள்..

Last Updated: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (16:03 IST)
மாதவன்-விஜய் சேதுபதி இணைந்து நடித்த “விக்ரம் வேதா” திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல ”கான்” நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

கோலிவுட்டில் மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான அமீர் கான் மற்றும் ஷயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை அமீர் கானும், மாதவன் கதாப்பாத்திரத்தை ஷயிஃப் அலிகானும் ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


”விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்கை, தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :