அமிர்கான் சொன்ன திருத்தம் – தாமதமாகும் விக்ரம் வேதா !

Last Modified புதன், 6 நவம்பர் 2019 (13:01 IST)
இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கும் விக்ரம் வேதா படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி அமிர்கான் பரிந்துரை செய்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான அமீர் கான் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை அமீர் கானும், மாதவன் கதாப்பாத்திரத்தை சயிஃப் அலிகானும் ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திரைக்கதையின் முழு இந்தி வெர்ஷனையும் அமிர்கானிடம் இயக்குனர்கள் வழங்க அதைப்படித்து பார்த்த அமிர்கான் நிறைய திருத்தங்களை சொல்லியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் இயக்குனர்கள் இந்தி திரைக்கதை எழுத்தாளர்கள் சிலரை வைத்துக்கொண்டு திரைக்கதையை செப்பனிடும் பணியினை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தொடங்குவது இன்னும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதில் மேலும் படிக்கவும் :