வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : புதன், 22 ஜனவரி 2020 (20:32 IST)

பிரபல நடிகர் கருத்துக்கு கங்கனா ரணாவத் பதிலடி !

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் இந்தியா என்ற நாடோ கருத்தோ இருந்ததில்லை என பிரபல பாலிவுட் நடிகர் சாயிஃப்ப் அலிகான் தெரிவித்திருந்தார். 
நடிகர் சாய்ப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள படம் தன்ஹாஜி . இந்திய வரலாற்றில் நடத்த முக்கிய சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இந்தப் படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, நடிகர் சயீட்ப் அலிகான், அனுபமா ஷோப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, கூறிய சயீஃப் அலிகான், தன்ஹாஜி படம் கற்பனையாக அடிப்படையில் உருவானதாக இருக்கும்.  அது வரலாறு இல்லை என தெரிவித்தார்.மேலும்  இந்தியாவுக்கு ஆங்கிலேயர் வரும் முன்னர் இந்தியா என்ற ஒரு நாடு இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.
 
இதுகுறித்து கூறிய நடிகை கங்கணா ரணாவத், ஆங்கிலேயர் வரும் முன்னர் பாரதம் என்ற ஒரு நாடு இருந்தது. இந்திய நாடு இல்லை என்றால் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பழமையான புராணம் எப்படி எழுதப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.